Tamil Muhurtham Logo
நேரலை சந்திராஷ்டம கணிப்பான்

இன்றைய சந்திராஷ்டமம் (Today Chandrashtamam)

தேதி: 08-06-2026 | நேரம்: 08:13 AM

தேதி
நேரம்
தற்போது சந்திராஷ்டமம் உள்ள ராசி:
கடகம் ராசி
நட்சத்திரங்கள்: புனர்பூசம், பூசம், ஆயில்யம்
calendar_view_week முழுமையான சந்திராஷ்டம நேர அட்டவணை
(சந்திரன் கும்பம் ராசியில் சஞ்சரிக்கும் முழு நேரமே, கடகம் ராசிக்கான சந்திராஷ்டம காலமாகும்)
நிகழ்வு / சந்திரனின் சஞ்சாரம் தொடங்கும் நேரம் முடியும் நேரம்
கடகம் ராசிக்கு முழு சந்திராஷ்டம நேரம் 06-06-2026, 07:04 PM 09-06-2026, 03:37 AM
புனர்பூசம் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம நேரம் 06-06-2026, 07:04 PM 07-06-2026, 07:56 AM
பூசம் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம நேரம் 07-06-2026, 07:56 AM 08-06-2026, 09:10 AM
ஆயில்யம் நட்சத்திரத்திற்கான சந்திராஷ்டம நேரம் 08-06-2026, 09:10 AM 09-06-2026, 03:37 AM
செய்யக் கூடாதவை
  • திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்கள் செய்வதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
  • புதிய தொழில் தொடங்குதல் மற்றும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக் கூடாது.
  • பங்குச்சந்தை, நிலம், நகை போன்ற பெரிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.
  • நீண்ட தூரப் பயணங்கள் மற்றும் இரவு நேரப் பயணங்களை ஒத்திவைப்பது நல்லது.
  • வீண் விவாதங்கள், கோபப்படுதல் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபடக் கூடாது.
செய்யக் கூடியவை
  • வழக்கமான மற்றும் அன்றாடப் பணிகளை எவ்வித தயக்கமும் இன்றி செய்யலாம்.
  • இறை வழிபாடு, தியானம் மற்றும் குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பான பலன்களைத் தரும்.
  • அமைதியாக இருப்பதும், விட்டுக் கொடுத்துச் செல்வதும் நன்மையை அளிக்கும்.
  • ஏழை எளியவர்களுக்கு உணவு தானம் செய்வது சந்திராஷ்டம தோஷத்தைக் குறைக்கும்.
  • சிவபெருமான் அல்லது அம்பாளை வழிபடுவது மனத் தெளிவைத் தரும்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதன் பலன்கள் என்ன?

ஜோதிட சாஸ்திரப்படி சந்திராஷ்டமம் (Chandrashtamam) என்பது ஒவ்வொருவருக்கும் மாதம் ஒருமுறை வரக்கூடிய ஒரு குறிப்பிட்ட கால அளவாகும். சந்திரன் உங்களது பிறந்த ராசிக்கு எட்டாவது ராசியில் (8th House) கோச்சார ரீதியாகப் பயணிக்கும் காலமே சந்திராஷ்டமம் எனப்படும். சந்திரன் ஒரு ராசியைக் கடக்க சுமார் இரண்டேகால் நாட்கள் (2¼ Days) எடுத்துக்கொள்வார், எனவே சந்திராஷ்டமமும் இரண்டேகால் நாட்களுக்கு நீடிக்கும்.

சந்திரன் மனதிற்குக் காரகன். அவர் எட்டாம் இடத்தில் மறையும்போது மனம் நிலையற்றதாக, குழப்பமாக, அல்லது தேவையற்ற டென்ஷனுடன் இருக்கும். அதனால்தான் இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள் ஜோதிடர்கள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்:

உங்கள் ராசிக்கு 8-வது ராசியில் சந்திரன் பயணம் செய்யும்போது, அந்த 8-வது ராசிக்கு உட்பட்ட 3 நட்சத்திரங்களும் சந்திராஷ்டம நட்சத்திரங்களாகும். உதாரணமாக, நீங்கள் மேஷ ராசி என்றால், உங்களுக்கு 8-வது ராசியான விருச்சிக ராசியில் சந்திரன் பயணிக்கும் காலமே சந்திராஷ்டமம். இதன்படி விருச்சிக ராசிக்குரிய விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய மூன்றும் சந்திராஷ்டம நட்சத்திரங்களாக அமையும்.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களுக்கு Tamil Muhurtham முகப்புப் பக்கத்தில் நீங்கள் முகூர்த்தம் குறிக்கும்போது, சந்திராஷ்டம நாட்களைத் தவிர்ப்பது மிக முக்கியம். இந்த இணையதளத்தில், திருக்கணித பஞ்சாங்க முறையின்படி சந்திரன் ராசி மற்றும் நட்சத்திரங்களில் பயணிக்கும் நேரங்கள் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு உங்களுக்காக வழங்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம் முடிகிறது என்பதை நீங்களே எளிதாக அறிந்துகொள்ளலாம்.

சந்திராஷ்டமம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. சந்திராஷ்டமம் என்றால் என்ன?

கோச்சாரப்படி சந்திரன் உங்களது பிறந்த ராசிக்கு எட்டாவது (8th) ராசியில் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டமம் ஆகும். சந்திரன் மனதிற்கு அதிபதி என்பதால், அவர் 8-ல் மறையும் போது மனம் குழப்பமாக இருக்கும்.

2. சந்திராஷ்டமம் எத்தனை நாட்கள் இருக்கும்?

சந்திரன் ஒரு ராசியைக் கடக்கத் தோராயமாக இரண்டேகால் நாட்கள் (2.25 Days / 54 மணிநேரம்) எடுத்துக்கொள்வார். எனவே ஒவ்வொருவருக்கும் மாதம் ஒருமுறை இரண்டேகால் நாட்கள் சந்திராஷ்டமம் வரும்.

3. சந்திராஷ்டம நாளில் என்ன செய்யக் கூடாது?

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்கள், புதிய தொழில் தொடங்குதல், பெரிய முதலீடுகள் செய்தல், புதிய வண்டி வாகனம் வாங்குதல் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

4. சந்திராஷ்டம நாளில் வண்டி ஓட்டலாமா?

அன்றாட வேலைக்குச் செல்ல வண்டி ஓட்டலாம், தவறில்லை. ஆனால், கவனம் சிதற வாய்ப்புள்ளதால் மிக கவனமாக மிதமான வேகத்தில் ஓட்டுவது அவசியம். நீண்ட தூர அல்லது இரவு நேரப் பயணங்களைச் சொந்தமாக ஓட்டிச் செல்வதைத் தவிர்க்கவும்.

5. சந்திராஷ்டம நாளில் பிறந்த குழந்தைக்கு தோஷமா?

இல்லை. சந்திராஷ்டமம் என்பது கோச்சார பலனே தவிர, பிறப்பு ஜாதக தோஷம் அல்ல. சந்திராஷ்டம நாளில் ஒரு குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு எந்தவித தோஷமும் கிடையாது. மாறாக, தாயின் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனம் தேவை.

6. எனக்கு இன்று சந்திராஷ்டமம் என்று எப்படி கண்டுபிடிப்பது?

மேலே உள்ள கட்டத்தில் இன்று சந்திராஷ்டமம் உள்ள ராசியின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ராசி உங்களின் பிறந்த ராசியாக இருந்தால், உங்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்று அர்த்தம்.

7. சந்திராஷ்டம நாளில் வேலைக்கு இன்டர்வியூ செல்லலாமா?

முடிந்தவரை ஒத்திவைப்பது நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில், குலதெய்வத்தை வேண்டிக்கொண்டும், மனதை மிக அமைதியாக வைத்துக்கொண்டும் செல்லலாம். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும்.

8. சந்திராஷ்டம தோஷம் நீங்க என்ன பரிகாரம்?

சந்திராஷ்டம நாளில் சிவபெருமானையோ அல்லது அம்பாளையோ வழிபடுவது மனச் சஞ்சலங்களைத் தீர்க்கும். மேலும், வாய் பேச முடியாத ஜீவன்களுக்கு (பசு, நாய், காகம்) உணவு அளிப்பது சிறந்த பரிகாரமாகும்.

9. தாராபலன் என்றால் என்ன? அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

தாராபலன் என்பது உங்கள் ஜென்ம நட்சத்திரத்திலிருந்து அன்றைய நட்சத்திரம் எத்தனையாவது என்று பார்ப்பது. சந்திராஷ்டம நாளில் தாராபலன் நன்றாக இருந்தாலும், சந்திரனின் நிலை சரியில்லாததால் புதிய செயல்களைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது.

10. சந்திராஷ்டமம் முடியும் நேரத்தை எப்படி சரியாக அறிவது?

சந்திரன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறும் வினாடியே சந்திராஷ்டமம் முடியும் நேரமாகும். எங்கள் இணையதளத்தில் திருக்கணித முறைப்படி அது துல்லியமாகக் கணிக்கப்பட்டு, நட்சத்திர வாரியாக அட்டவணையில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

home ஹோரை calendar_month பஞ்சாங்கம் gps_fixed லக்னம் calendar_month கௌரி