Tamil Muhurtham Logo
நேரலை ஹோரை கணிப்பான்

இன்றைய ஹோரை & உப-ஹோரை (Today Horai)

தேதி: 08-06-2026 | ஊர்: Chennai

ஊர் (City)
தேதி
நேரம்
🌅சூரிய உதயம்05:41 AM
🌇சூரிய அஸ்தமனம்06:34 PM
தற்போதைய நேரம்:
06:56:03 AM
தற்போது நடக்கும் ஹோரை

சனி ஹோரை

உப-ஹோரை: குரு
calendar_view_week முழு ஹோரை அட்டவணை (24 மணிநேரம்)
ஹோரை கிரகம் தொடங்கும் நேரம் முடியும் நேரம்
சந்திரன் ஹோரை பகல் 05:41 AM 06:46 AM
சனி ஹோரை பகல் 06:46 AM 07:50 AM
குரு ஹோரை பகல் 07:50 AM 08:54 AM
செவ்வாய் ஹோரை பகல் 08:54 AM 09:59 AM
சூரியன் ஹோரை பகல் 09:59 AM 11:03 AM
சுக்கிரன் ஹோரை பகல் 11:03 AM 12:07 PM
புதன் ஹோரை பகல் 12:07 PM 01:12 PM
சந்திரன் ஹோரை பகல் 01:12 PM 02:16 PM
சனி ஹோரை பகல் 02:16 PM 03:21 PM
குரு ஹோரை பகல் 03:21 PM 04:25 PM
செவ்வாய் ஹோரை பகல் 04:25 PM 05:29 PM
சூரியன் ஹோரை பகல் 05:29 PM 06:34 PM
சுக்கிரன் ஹோரை இரவு 06:34 PM 07:29 PM
புதன் ஹோரை இரவு 07:29 PM 08:25 PM
சந்திரன் ஹோரை இரவு 08:25 PM 09:21 PM
சனி ஹோரை இரவு 09:21 PM 10:16 PM
குரு ஹோரை இரவு 10:16 PM 11:12 PM
செவ்வாய் ஹோரை இரவு 11:12 PM 12:08 AM
சூரியன் ஹோரை இரவு 12:08 AM 01:03 AM
சுக்கிரன் ஹோரை இரவு 01:03 AM 01:59 AM
புதன் ஹோரை இரவு 01:59 AM 02:54 AM
சந்திரன் ஹோரை இரவு 02:54 AM 03:50 AM
சனி ஹோரை இரவு 03:50 AM 04:46 AM
குரு ஹோரை இரவு 04:46 AM 05:41 AM
சுப ஹோரைகள்
  • குரு ஹோரை: தங்கம் வாங்க, திருமணம் பேச, வங்கி முதலீடு செய்ய, ஆபரணங்கள் அணிய மிகச் சிறந்த முழு சுப நேரம்.
  • சுக்கிர ஹோரை: புதிய வீடு குடிபோக, வண்டி வாகனம் வாங்க, ஆடை ஆபரணம் வாங்க, காதலை வெளிப்படுத்த ஏற்றது.
  • புதன் ஹோரை: கல்வி கற்க, புதிய சான்றிதழ்கள் பெற, கலைகள் கற்க, ஜோதிடம் பார்க்க மிகவும் சிறப்பு.
  • சந்திர ஹோரை: பயணம் செய்ய, வியாபாரம் தொடங்க, பெண் பார்க்க, வங்கி கணக்குத் தொடங்க மிகவும் ஏற்றது.
அசுப / சிறப்பு ஹோரைகள்
  • சூரிய ஹோரை: அரசு காரியங்கள், வழக்குகள் சந்திக்க, உயர் அதிகாரிகளைப் பார்க்க உகந்தது. (புதிய சுப காரியங்களைத் தவிர்க்கவும்).
  • செவ்வாய் ஹோரை: கடன் அடைக்க, வண்டி வாகனம் பழுது பார்க்க, நிலம் வாங்க/வில்லங்கம் தீர்க்க உகந்தது. (சுப காரியங்களை தவிர்க்கவும்).
  • சனி ஹோரை: இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம், பழைய பொருட்கள் வாங்க, மரங்கள் நட உகந்தது. (மற்ற சுப காரியங்களைத் தவிர்க்கவும்).

இன்றைய ஹோரை மற்றும் உப-ஹோரை (Today Horai & Upa-Horai)

எந்த ஒரு சுப காரியங்களை தொடங்குவதற்கும் இன்றைய நல்ல நேரம் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இன்றைய ஹோரை (Today Horai) பார்ப்பதும் மிகவும் அவசியமாகும். வேத ஜோதிடத்தின்படி ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரமும் நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதுவே ஹோரை எனப்படும்.

முகூர்த்தம் குறிப்பதில் ஹோரையின் பங்கு என்ன?

ஒரு சுப காரியத்திற்கு முழுமையான முகூர்த்தம் (Muhurtham) குறிக்கும்போது, திதி, நட்சத்திரம், யோகம், லக்னம் ஆகியவற்றைப் பார்ப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த முகூர்த்த நேரத்தில் என்ன ஹோரை (Horai) நடக்கிறது என்பதைப் பார்ப்பதும் மிக மிக முக்கியம். நல்ல லக்னமாகவே இருந்தாலும், அந்த நேரத்தில் அசுப ஹோரைகளான சனி அல்லது செவ்வாய் ஹோரை நடந்தால், அந்த முகூர்த்தத்தின் சுப பலன்கள் குறைந்துவிடும்.

மாறாக, சுப ஹோரைகளான குரு, சுக்கிரன், புதன் அல்லது வளர்பிறை சந்திர ஹோரைகளில் ஒரு காரியத்தைத் தொடங்கும்போது, அந்த காரியம் எவ்வித தடங்களுமின்றி வெற்றிகரமாக முடிவடையும். எனவே, Tamil Muhurtham முகப்புப் பக்கத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சுப முகூர்த்த தேதிகளில், சரியான சுப ஹோரையைத் தேர்ந்தெடுத்து காரியத்தைத் தொடங்குங்கள்.

இந்த இணையதளத்தில் உள்ள ஹோரை கணிப்பான் மூலம், நீங்கள் வசிக்கும் ஊரின் சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு, அதிநவீன வானியல் கணித முறை மற்றும் பாரம்பரிய திருக்கணிதப் பஞ்சாங்க அடிப்படையில் இன்றைய ஹோரை மற்றும் உப-ஹோரை நேரங்களை நொடிப்பொழுதில் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

எங்கள் ஹோரை கணிப்பானின் சிறப்பம்சங்கள்:

  • துல்லியமான சூரிய உதயம்: வெறும் 6 மணி கணக்கு இல்லாமல், உங்கள் ஊருக்கான உண்மையான சூரிய உதயத்தை வைத்தே ஹோரை கணக்கிடப்படுகிறது.
  • உப-ஹோரை வசதி: ஒரு மணி நேர ஹோரையை மேலும் 7 பாகங்களாகப் பிரித்து வரும் மிக நுண்ணிய உப-ஹோரை (Upa-Horai) நேரத்தையும் இங்கு துல்லியமாகப் பார்க்கலாம்.
  • கடந்த / எதிர்கால தேதிகள்: 'இன்று' பட்டனைப் பயன்படுத்தி லைவ் ஹோரையை பார்ப்பது மட்டுமின்றி, உங்களுக்குத் தேவையான தேதியையும் நேரத்தையும் உள்ளிட்டு அந்த நேரத்தில் என்ன ஹோரை நடந்தது என்பதையும் அறியலாம்.

ஹோரை (Horai) - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. ஹோரை (Horai) என்றால் என்ன?

ஹோரை என்பது ஒரு நாளின் ஒவ்வொரு மணி நேரத்தையும் ஆளக்கூடிய கிரகத்தின் பெயராகும். ஒரு நாளில் மொத்தம் 24 ஹோரைகள் வரும். அந்தந்த ஹோரையில் அந்த கிரகத்திற்குரிய காரியங்களைச் செய்தால் வெற்றி நிச்சயம்.

2. ஹோரை எப்படி கணக்கிடப்படுகிறது?

அன்றைய தினத்தின் சூரிய உதயத்திலிருந்து முதல் ஹோரை தொடங்கும். அந்த நாளின் கிழமை எந்த கிரகத்திற்கு உரியதோ, அந்த கிரகமே முதல் ஹோரையை ஆளும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தில் சூரிய ஹோரை தொடங்கும்.

3. தங்கம் வாங்க எந்த ஹோரை சிறந்தது?

தங்கம் வாங்க, பணம் சேமிக்க மற்றும் முதலீடு செய்ய குரு ஹோரை (Jupiter Horai) மிகவும் சிறந்தது. அடுத்தபடியாக சுக்கிர ஹோரையும் (Venus) சிறப்பான பலன்களைத் தரும்.

4. பயணம் செய்ய எந்த ஹோரை உகந்தது?

புதிய ஊருக்குப் பயணம் செல்ல சந்திரன் (Moon) மற்றும் சுக்கிர (Venus) ஹோரைகள் மிகவும் உகந்தவை. இவை பயணத்தை இனிமையாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும்.

5. சனி ஹோரையில் சுப காரியங்கள் செய்யலாமா?

கூடாது. சனி ஹோரையில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், இரும்பு வியாபாரம் மற்றும் விவசாயப் பணிகளை இந்த நேரத்தில் செய்யலாம்.

6. உப-ஹோரை (Upa-Horai) என்றால் என்ன?

ஒரு மணி நேர ஹோரையை மேலும் 7 சம பாகங்களாகப் பிரித்து அறியப்படுவது உப-ஹோரை ஆகும். இது ஒரு குறிப்பிட்ட காரியத்தை மேலும் துல்லியமான நேரத்தில் தொடங்க ஜோதிடர்களுக்குப் பெரிதும் உதவுகிறது.

7. ஹோரை நேரங்கள் தினமும் ஒரே மாதிரி இருக்குமா?

இல்லை. ஹோரை நேரங்கள் தினசரி சூரிய உதயத்தைப் பொறுத்து மாறுபடும். கோடை காலத்தில் சூரியன் சீக்கிரம் உதிப்பதால் ஹோரை நேரங்களும் முன்னதாகவே தொடங்கிவிடும்.

8. கடந்த கால தேதிகளுக்கு ஹோரை பார்க்க முடியுமா?

ஆம், எங்களின் ஹோரை கணிப்பானில் உங்களுக்குத் தேவையான எந்த தேதியையும், நேரத்தையும் உள்ளிட்டு அந்த நேரத்தில் என்ன ஹோரை நடைபெற்றது என்பதை அறியலாம்.

9. இடம் மாறினால் ஹோரை நேரம் மாறுமா?

கண்டிப்பாக மாறும். சென்னையில் சூரிய உதயமாகும் நேரமும், கோயம்புத்தூரில் சூரிய உதயமாகும் நேரமும் வெவ்வேறானவை. எனவே எங்கள் தளத்தில் ஊரின் பெயரை உள்ளிட்டால் மட்டுமே சரியான ஹோரையைப் பெற முடியும்.

10. சுக்கிர ஹோரை எதற்கு விசேஷமானது?

சுக்கிர ஹோரை ஆடம்பரப் பொருட்கள் வாங்க, கலைகள் கற்க, திருமணம் பேச, வண்டி வாகனம் வாங்க மற்றும் புதிய ஆடைகள் அணிய மிகவும் விசேஷமானது.

home ஹோரை calendar_month பஞ்சாங்கம் gps_fixed லக்னம் calendar_month கௌரி